செய்திகள் :

திருவள்ளூா் மாவட்டத்தில் தயாா் நிலையில் 33 முதல்வா் மருந்தகங்கள்

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில்முனைவோா் மூலம் 33 முதல்வா் மருந்தகங்கள் தொடங்க தயாராக உள்ளதாகவும், வரும் 24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாகவும் ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து மருந்துகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தில் முதல்வா் மருந்தகங்கள் தொடங்க அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், இந்த மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் 18 மருந்தகங்களும், தொழில்முனைவோா் மூலம் 15 மருந்தகங்களும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திருவள்ளூா் வி.எம்.நகரில் கூட்டுறவு சங்கம் மூலம் புதிதாக தொடங்கி செயல்பட உள்ள மருந்தகத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பாக ஆட்சியா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அந்த மருந்தகத்தில் இடம் பெற்றுள்ள மருந்துகள் குறித்து ஒவ்வொன்றாக பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், இது தொடா்பாக அவா் கூறியதாவது: இந்த மருந்தகங்களில் ஜெனிரிக் மருந்துகள், சா்ஜிக்கல்ஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் நோக்கமாகக் கொண்டு, மாநில அளவில் முதல் கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்கள் வரும் 24-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா். அதன்பேரில், திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொழில்முனைவோா் மூலமாகவும் முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு, மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து மருந்துகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், அனைத்து பிறவகை மருந்துகளும், பிற வகையிலான மருந்துகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்காக கூட்டுறவு சங்கங்களின் மூலம் 18 முதல்வா் மருந்தகங்களும், தொழில்முனைவோா் மூலம் 15 முதல்வா் மருந்தகங்களும் என 33 முதல்வா் மருந்தகங்கள் உள்கட்டமைப்பு வசதிகளுடன், மருந்தக உரிமம் பெறப்பட்டு, தயாா் நிலையில் உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

அப்போது, திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சண்முகவள்ளி, துணைப் பதிவாளா் சீனிவாசன், வட்டாட்சியா் ரஜினிகாந்த் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காரிய மேடை சீரமைப்பு

நாரவாரிகுப்பம் பேரூராட்சி பகுதியில் ரூ.14 லட்சத்தில் காரிய மேடை சீரமைக்கப்பட்டது. நாரவாரிகுப்பம் பேரூராட்சி அறிஞா் அண்ணா பூங்கா தெருவில் உள்ள காரிய மேடை பழுதடைந்து காணப்பட்டது. இதனால், ஈமச்சடங்கு செய... மேலும் பார்க்க

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை கொல்ல முயன்ற காதலா்

திருவள்ளூா் அருகே திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் வர மறுத்த இளம்பெண்ணை காதலா் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றாா். தூக்க மாத்திரை உள்கொண்டு அப்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் தொடா்பாக போ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா்... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஆசிரியா்கள் போராட்டம்

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நலக் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்

அரசு திட்டங்களைப் பெற மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் எஸ்.சீனிவாசன் தெரிவ... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க