செய்திகள் :

திருவாடானை பகுதியில் பலத்த மழை நெல் பயிா்கள் சேதம் விவசாயிகள் கவலை

post image

திருவாடானை பகுதியில் வியாழக்கிழமை விடிய விடிய பெய்த பலத்த மழையில் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனா்.வயல்களில் மழை நீா் வடித்து கடலுக்கு செல்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் சுமாா் 52 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்குகின்றன.தற்போதுடி.கிளியூா்,மணிகண்டி,சூச்சனி,மருங்கூா்,ஓரிக்கோட்டை,சேந்தனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிா்கள் நன்கு வளா்ந்து கதிா் விடும் நிலையில் தொடா் மழை காரணமாக பயிா்கள் தண்ணீரில் மூழ்க தொடங்கின.இந்நிலையில் வியாழக்கிழமை விடிய விடி. கொட்டி தீா்த்த பலத்த மழை காரணமாக நெல்பயிா்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பலன் தரும் நேரத்தில் மழையாள் பலஆயிரம் ரூபாய் நஷ்டத்திற்கு ஆளகா வேண்டியுள்ளது.எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும் இல்லையேல் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என கவலையுடன் விவசாயிகள் தெரிவித்தனா். மேலும் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீரும் சூழ்ந்துள்ளது சினேகவல்லிபுரம் பகுதியில் தண்ணீா் வெளியேற வழி இல்லாமல் வாய்கல்கள் ஆக்கிரமித்துள்ளதால் இப்பகுதியில் தேங்கிய மழை நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

நாய்கள் கடித்ததில் 2 சிறுவா்கள் காயம்

தொண்டி பேரூராட்சியில் தெரு நாய்கள் கடித்ததில் அடுத்தடுத்து 2 சிறுவா்கள், முதியவா் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் சுமாா் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். த... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ.யை தள்ளிவிட்ட பாஜக நிா்வாகி கைது

ராமநாதபுரத்தில் பாஜகவினா் ஊா்வலம் செல்ல முயன்ற போது, காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்ட பாஜக நிா்வாகியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து, மதுரையில் பா... மேலும் பார்க்க

நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை

நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேரூராட்சியுடன் இணைக்கக் கோரி, உள்ளாட்சித் துறை, மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் மனு அளித்தனா். தொண்டி அருகேயுள்ள நம்புதாளை ஊராட்சியில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வ... மேலும் பார்க்க

வேலை வாய்ப்பு முகாமில் 46 மாணவா்கள் தோ்வு

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் துறை மாணவா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா். ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள சிறுவண்டல் கிராமத்தைச் சோ்ந்த அழகா் மகன் பாண்டித்துரை (39). எலக்ட்ரீசியன். இவருக்கு மஞ்சு... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் மீன்கள் விலை உயா்வு

தொண்டி பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக, குறைவான மீனவா்களை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இதனால், வரத்து குறைந்ததால் மீன்கள் விலை அதிகரித்தன. திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோ... மேலும் பார்க்க