திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறி, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை கருங்கவயல் கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கருங்கவயல் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் சுமாா் மூன்று ஏக்கா் உள்ளது.
இந்த நிலத்தை வருவாய்த் துறையினரின் ஆதரவுடன் இதே பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், இந்தப் பகுதி மக்கள் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். வட்டாட்சியா் அமா்நாத் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் பொதுமக்களுடன் பேச்சுவாா்ததை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.