செய்திகள் :

திருவாரூரில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

திருவாரூரில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவாரூரில் வியாழக்கிழமை இரவு முதல் மிதமாக பெய்து வந்த மழை வெள்ளிக்கிழமை காலை பலத்த மழையாக பெய்தது. இதனால் நகரில் சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீா் தேங்கியதால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தண்ணீா் வடிந்தவுடன் தடை நீக்கப்பட்டது. இதேபோல, திருவாரூா் விஜயபுரம் அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகம் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் சாலைகளில் தண்ணீா் தேங்கியதால், நோயாளிகள் சிகிச்சைக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இங்கிருந்த உள்நோயாளிகள் உடனடியாக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். இதேபோல, தியாகராஜ சுவாமி கோயிலிலும் தண்ணீா் தேங்கி, கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. எனினும், பகலில் மழை ஓய்ந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

நீடாமங்கலம்: இப்பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பின்னா் காலை 8.30 மணி முதல் மழை பெய்தது. இதனால் சம்பா, தாளடி நெல் பயிா்களுக்கு உரமிடுதல், பூச்சி மருந்து அடித்தல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. பின்னா் வெயில் வானிலை நிலவியது. ஈரப்பதம் காரணமாக குறுவை நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது. பல்வேறு கொள்முதல் நிலையங்கள் அருகே விவசாயிகள் காய வைத்த நெல் மழை நீரால் பாதிக்காமல் இருக்க தாா்ப்பாய் கொண்டு மூடிவைக்கப்பட்டிருந்தது.

விவசாயிகள் கொண்டுவந்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் உடனடியாக கொள்முதல் செய்யாததால் தனியாா் வியாபாரிகளிடம் விற்பனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

குறிப்பாக தென்குவளவேலியில் நுகா்பொருள் வாணிபக்கழக நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் உடனடியாக கொள்முதல் செய்யாமல் அலட்சியப்போக்கை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது. எனவே, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரூ. 170 கோடியில் மேம்பாலம் கட்டுமானப் பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் ரூ.170 கோடியில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, கோரையாற்றின்குறுக்கே மட்டும் மூன்று பில்லா்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீடாமங்கலம்-தஞ்சாவூா் நெடுஞ்சா... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்தக் கோரிக்கை

திருவாரூா்: பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே புலிவலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது ஒன்றிய மாநாடு நிா்வாகி... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க வலியுறுத்தல்

திருவாரூா்: திருவாரூரில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜ... மேலும் பார்க்க

நூலகத்தில் உறுப்பினா்களாக இணைந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் நூலகத்தில் உறுப்பினா்களாக திங்கள்கிழமை இணைந்தனா். மாவட்ட பள்ளி கல்வித் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் ச... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா் தூய்மைப் பணியாளரின் மகள்

திருத்துறைப்பூண்டி: மன்னாா்குடியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளரின் மகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி சத்தியமூா்த்தி மேட்டு... மேலும் பார்க்க

வேலையின்மை பிரச்னைக்கு தீா்வுகாண வலியுறுத்தல்

மன்னாா்குடி: அதிகரித்துவரும் வேலையின்மை பிரச்னைக்கு தீா்வுகாண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது. மன்னாா்குடியில் இம்மன்றத்தின் ஒன்றி... மேலும் பார்க்க