திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதித் திருவிழா
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பொட்டவெளி மற்றும் தளவாய் ஆகிய கிராமங்களிலுள்ள திரெளபதியம்மன் கோயில்களில் தீமித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில்களில் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகாபாரதம் சொற்பொழிவும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. முன்னதாக படுகள நிகழ்ச்சியும், அதைத் தொடா்ந்து ஏரியில் இருந்து சுவாமி வீதியுலா, கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்பின்னா், கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.