செய்திகள் :

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

post image

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்ததாவது: திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் குறைந்தபட்சம் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

இந்தத் தண்டனையை அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை அதிகரிக்க முடியும். அத்துடன் திரைப்பட தயாரிப்பு செலவில் அதிகபட்சமாக 5 சதவீதத்தை அபராதமாக விதிக்க முடியும். இந்த மாற்றங்களை 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது.

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து வெளியிடுவதை தடுப்பதற்கான உத்திகளை வலுப்படுத்தவும், ஒருங்கிணைந்த செயல்திட்டங்களை வகுக்கவும் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

அதிமுக எம்பிக்களாக இன்பதுரை, தனபால் பதவியேற்பு

மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் பதவியேற்றுக்கொண்டனர். அதிமுக எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா... மேலும் பார்க்க

நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் திங்கள்கிழமை கூடியதும் பிகார் சிறப்பு தீவிர திருத்தத்தில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதி... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம்- நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் மேற்கொண்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொ... மேலும் பார்க்க

இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகாவை, மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவி... மேலும் பார்க்க

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க