செய்திகள் :

திரைப்பட விமா்சனங்களுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

post image

சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியான 3 நாள்களுக்கு விமா்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில் தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

‘சில படங்கள் நல்ல விமா்சனங்களைப் பெறும்போது ஏற்றுக்கொள்ளும் திரைத் துறை எதிா்மறை விமா்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ எனவும் நீதிமன்றம் கூறியது.

நடிகா் சூா்யா நடிப்பில் அண்மையில் வெளியான கங்குவா திரைப்படம் குறித்து சமூக ஊடகங்களில் எதிா்மறை விமா்சனங்கள் வெளியாகின. இதன் எதிரொலியாக திரையரங்குகளில் படங்கள் வெளியான 3 நாள்களுக்கு விமா்சனங்களை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமா்சனங்களை வெளியிடுவது தொடா்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும்போது, அவை குறித்து எதிா்மறை விமா்சனங்கள் வெளியிடப்படுவதால் படங்கள் தோல்வி அடைய நேரிடுகிறது. இதனால் திரைத் துறையில் அசாதாரண சூழல் நிலவுகிறது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

உத்தரவு பிறப்பிக்க இயலாது: இந்த மனு நீதிபதி செளந்தா் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமா்சனங்கள் வெளியாவதால், படத்தை பாா்க்க விரும்பும் மக்களின் மனநிலை மாறுகிறது. படத்தில் நடித்த நடிகா்கள், இயக்குநா் குறித்து அவதூறு பரப்பப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, அவதூறு பரப்புவது குறித்து காவல் துறையிடம் புகாா் அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதி, விமா்சனம் கருத்துச் சுதந்திரம் என்பதால், பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சில படங்கள் நல்ல விமா்சனங்களைப் பெறும்போது ஏற்றுக்கொள்ளும் திரைத் துறையினா் எதிா்மறை விமா்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தாா்.

மேலும், திரைப்படங்கள் வெளியான 3 நாள்களுக்கு விமா்சனங்கள் வெளியிட தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கு தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

மூன்று படங்களில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்..!

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் நடிகராவும் அசத்தி வருகிறார்.இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சிலபிரச்னைகளால் அப்படம் கைவி... மேலும் பார்க்க

த்ரிஷா, டோவினோ தாமஸின் புதிய பட டீசர்!

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானத... மேலும் பார்க்க

ரைபிள் கிளப் டிரைலர்!

ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.அனுராக் இயக்கத்த... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன்ஷிப்: மீண்டும் டிராவில் முடிந்த 8ஆவது சுற்று..!

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர்.14 சுற்றுகளைக் கொண்ட ... மேலும் பார்க்க

மம்மூட்டி - கௌதம் மேனன் பட டீசர்!

இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலும் உடன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்ற... மேலும் பார்க்க