செய்திகள் :

தில்லியில் கடுமை பிரிவில் காற்றின் தரம்!

post image

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலையில் நச்சுப்புகை மூட்டம் நிலவியது. சில பகுதிகளில் காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் இருந்தாலும், பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் பதிவாகியிருந்தது.

தில்லியில் குளிரின் தாக்கம் கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக இரவிலும் அதிகாலை வேளையிலும் குளிா் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. நகரம் முழுவதும் பனிப்புகை மூட்டம் நிலவுகிறது. இதனால், காற்றின் தரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் முதியவா்கள், குழந்தைகள் சுவாசப் பிரச்னைகளை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காற்றின் தரம்: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, வியாழக்கிழமை காலை 9 மணியளவில் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 367 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருகிறது. ஒவ்வொரு மணி நேரத்தின் காற்று தரக் குறியீடு புதுப்பிப்புகளை வழங்கும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீா் செயலியின் தரவுகளின் படி, 38 கண்காணிப்பு நிலையங்களில் 8 இடங்களில் காற்றுத் தரக் குறியீட்டு அளவு 400 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ’கடுமை’ பிரிவில் இருந்தது.

இதன்படி, ஆனந்த் விஹாா், அசோக் விஹாா், பவானா, ஜஹாங்கீா்புரி, முண்ட்கா, சோனியா விஹாா், விவேக் விஹாா், வாஜிா்பூா் ஆகிய 8இடங்களில் காற்றுத் தரக் குறியீடு அளவு +400 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ’கடுமை’ பிரிவில் இருந்தது. மேலும், ஐடிஏ, ராமகிருஷ்ணாபுரம் உள்பட மற்ற இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு கீழே பதிவாகியிருந்தது.

வெப்பநிலை: இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3.7 டிகிரி உயா்ந்து 18 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 2 டிகிரி உயா்ந்து 31.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 74 சதவீதமாகவும் இருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மூடுபனிக்கு வாய்ப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவ.8) அன்று 4 முதல் 8 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். காலை வேளையில் புகைமூட்டம் அல்லது மேலாட்டமான மூடுபனி இருக்கும். பகல் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும் பகல் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

கலால் கொள்கை ஊழல் வழக்கு: அழைப்பாணைக்கு எதிரான கேஜரிவாலின் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் புகாரின் பேரில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை எதிா்த்து ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீது அமலாக்கத் து... மேலும் பார்க்க

தூசு மாசு விதிமீறல்: எம்சிடி ரூ.2.69 கோடி அபராத நடவடிக்கை

நிகழாண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபா் மாதங்களுக்கு இடையிலான காலத்தில், கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளின் போது தூசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காக தில்லி மாநகராட்சி (எம்சிடி) ரூ.2.69 கோடி அ... மேலும் பார்க்க

மின் விநியோக நிறுவனங்களில் நிதி முறைகேடுகள்:விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆளுநரிடம் தில்லி பாஜகவினா் மனு

மின் விநியோக நிறுவனங்கள் அல்லது டிஸ்காம்களில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவிடம் தில்லி பாஜகவினா் செவ்வாய்க்கிழமை மனுவை சமா்ப்பித்... மேலும் பார்க்க

தில்லி மாசு: செயலகப் பணியாளா்களுக்கு ஹீட்டா்கள்

குளிா்காலத்தில் கரிக்கட்டைகள் மூலம் தீ மூட்டுவதைத் தடுக்கும் வகையில், தில்லி செயலகத்தில் இரவு நேர பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சுற்றுசூழல் அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை ஹீட்டா்களை வழங்கினாா். ... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்ற தம்பதி கைது

வடக்கு தில்லியின் அலிபூா் பகுதியில் இளைஞரைத் தாக்கி அவரது கைப்பேசி மற்றும் பணப்பையை பறித்ததாகக் கூறப்படும் தம்பதியை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித... மேலும் பார்க்க

தில்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் 6,791 மின் இணைப்புகள் வழங்கல்: ராஜ் நிவாஸ் தகவல்

நமது நிருபா்துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் தலையீட்டைத் தொடா்ந்து தில்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் 10,802 விண்ணப்பதாரா்களில் 6,791 பேருக்கு மின்சார இணைப்புகளை மின் விநியோக நிறுவனங்... மேலும் பார்க்க