செய்திகள் :

தில்லியில் முதல் பிரசாரம்.. ராகுல் பங்கேற்பு!

post image

தில்லி தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 13-ல் வடகிழக்கு தில்லியின் சீலம்பூரில் நடைபெறும் பிரசாரத்தில் கலந்துகொண்டு பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளதாக அக்கட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொறுப்பாளர் காஜி நிஜாமுதீன் கூறுகையில்,

நாட்டு மக்களின் குரலாக ராகுல்காந்தி மாறியுள்ளார். எங்கு எந்தப் பிரச்னை நடைபெற்றாலும், அங்கு ராகுல் குரல் எழுப்புவார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு வடகிழக்கு தில்லியின் சீலம்பூர் பகுதியில் 'ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதன்' என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதில் ஏராளமான மக்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தலைவர்கள் பங்கேற்பார்கள்.

தில்லியில் ராகுல் காந்தியின் முதல் பேரணி இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தலைநகரில் இரண்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார், அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் கட்சியின் அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுடன் இணைவதற்கும் கட்சித் தொண்டர்களின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் கடந்த நவம்பரில் காங்கிரஸ் ஒரு மாத கால தில்லி நியாய யாத்திரையை நடத்தியது.

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி பேரவைக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும்.

முன்னதாக 2015 மற்றும் 2020 தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்களில், ஆம் ஆத்மி முறையே 67 மற்றும் 62 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்!

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவைச் சேர்ந... மேலும் பார்க்க

நாட்டில் ஆணின் பெயரில் உள்ள ஒரே நதி இதுதானா?

இந்தியாவில் உள்ள நதிகளின் பெயர்கள் அனைத்தும் பெண்ணின் பெயர்களையே கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரே ஒரு நதி அதுவும் அசாமில் பாய்ந்தோடும் அந்த நதி மட்டும்தான் ஆணின் பெயரில் உள்ளது.... மேலும் பார்க்க

நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார். மேலும் பார்க்க

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம்: பிரதமா் பங்கேற்பு

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.அறுவடை திருவிழாவான மகர சங்கராந்... மேலும் பார்க்க

உலகின் கடல்சாா் சக்தி இந்தியா: 3 போா்க் கப்பல்களை அா்ப்பணித்து பிரதமா் மோடி பெருமிதம்

மும்பை: உலகின் முக்கிய கடல்சாா் சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீா் ஆகிய 3 முன்கள போா்க்கப்பல... மேலும் பார்க்க