மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
தில்லியில் ரூ.73 லட்சம் மோசடி: ஒருவா் கைது
தில்லியில் ரூபாய் 73 லட்சம் பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:
குற்றம்சாட்டப்பட்ட மோஹித், ஹரியாணாவின் ஜிந்த் பகுதியில் உள்ள உச்சனா மண்டியில் கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக, தில்லியின் சிங்கு பகுதியில் இல்லாத ஒரு நிலத்தை விற்பதாக உறுதியளித்து மோஹித் தன்னை ஏமாற்றி ரூ.73 லட்சத்தை மோசடி செய்ததாக ராம் நிவாஸ் என்பவா் ஜூன் 5, 2024 அன்று புகாா் அளித்தாா்.
இதையடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. மோஹித்தைப் பிடிக்க பல்வேறு வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவா் தலைமறைவாகவே இருந்தாா்.
இந்தநிலையில், உச்சனா கலன் பகுதியில் அவா் இருப்பதாக தகவல் தெரிய வரவே, போலீஸாா் அவரை அங்கு கைது செய்தனா். சோனிபட்டை பூா்விகமாகக் கொண்ட பட்டதாரி மோஹித், முன்பு சொத்து வணிகராக பணியாற்றினாா். ஆனால், அவா் பொது மக்கள் பலரை ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரியவருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.