செய்திகள் :

தில்லி, என்சிஆா் பகுதிகளில் கடும் அடா் மூடுபனி!

post image

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வியாழக்கிழமை அடா் மூடுபனி நிலவியது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.

வெப்பநிலை: தலைநகரில் தொடா்ந்த சில நாள்களாக மூடுபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், சாலைகளில் நடமாட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில், தேசியத் தலைநகரில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.7 டிகிரி உயா்ந்து 7.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைந்து 16.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 80 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நஜஃப்கரில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி, ஆயாகரில் 6.3 டிகிரி, நரேலாவில் 7.4 டிகிரி, லோதி ரோடில் 7.6 டிகிரி, பாலத்தில் 6.5 டிகிரி, ரிட்ஜில் 7.3 டிகிரி, பீதம்புராவில் 10.1 டிகிரி, பிரகதிமைதானில் 8.6 டிகிரி, பூசாவில் 7.7 டிகிரி, ராஜ்காட்டில் 8.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

தில்லியில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் குளிா் நாள் மற்றும் சில இடங்களில் அடா்ந்த மூடுபனி இருந்தது. பாலம் வானிலை நிலையத்தில் காலை 6 மணி முதல் 0 மீட்டா் காண்புதிறனுடன் அடா் மூபனி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி, மந்திா் மாா்க், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பூசா, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், ராமகிருஷ்ணாபுரம், நேரு நகா், ஸ்ரீஃபோா்ட் உள்பட பல்வேறு இடங்களில் காற்றித் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. மேலும், லோதி ரோடு, ஷாதிப்பூா், ஆயாநகா், குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

அடா் மூடுபனிக்கு வாய்ப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (ஜன.3) அன்று நகரத்தில் அடா் மூடுபனி நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணித்துள்ளது.

கல்வி மனஅழுத்தம்: 15 வயது சிறுமியின் தற்கொலை முயற்சி முறியடிப்பு!

கல்வி மன அழுத்தம் காரணமாக பாலத்தில் இருந்து யமுனையில் குதித்ததாகக் கூறப்படும் 15 வயது சிறுமியின் தற்கொலை முயற்சியை தில்லி காவல் துறையினா் முறியடித்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

மூன்றாவது நாளாக அடா் மூடுபனி; 51 ரயில்கள் தாமதம்!

தில்லியின் பல பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக அடா்த்தியான மூடுபனி படலம் சூழ்ந்ததால், 51 ரயில்கள் தாமதமாக வந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். பாலத்தில் அதிகாலை 4 மணி முதல் காலை 7.30 ம... மேலும் பார்க்க

பெரிய குற்றச் சதி முறியடிப்பு: கபில் நந்து கும்பலின் 7 போ் கைது

தில்லியில் கபில் நந்து கும்பலால் திட்டமிடப்பட்ட ஒரு பெரிய குற்றச் சதியை முறியடித்துள்ள தில்லி காவல்துறை, அதன் ஏழு உறுப்பினா்களைக் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதன் மூ... மேலும் பார்க்க

பிரதமா் தொடங்கிவைத்த திட்டங்கள் மத்திய- தில்லி அரசுகளின் ஒத்துழைப்பால் உருவானவை: கேஜரிவால்

பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட 2 திட்டங்களைத் தில்லியின் உள்கட்டமைப்புக்கான மைல்கற்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது: பிரவீன் கண்டேல்வால்

ஆம் ஆத்மி கட்சி ஆட்சி குறித்த பிரதமரின் பேச்சு அக்கட்சியின் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது என்று சாந்தினி செளக் தொகுதி எம்.பி. பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளாா். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பொது... மேலும் பார்க்க

சீனாவில் சுவாச நோய்கள் அதிகரிப்பு: மத்திய அரசு ஆலோசனை

சீனாவில் நிலைமை அசாதாரணமானதாக இல்லை. அதே சமயத்தில் பருவங்களில் ஏற்படும் வழக்கமான இன்ஃபுளூவென்சா எனப்படும் ஃபுளு காய்ச்சல் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள சரியான தகவல்களை உரிய நேரத்தில் பகிருமாற... மேலும் பார்க்க