செய்திகள் :

தில்லி எய்ம்ஸில் காத்திருந்த நோயாளிகளை சந்தித்த ராகுல்!

post image

மக்களவை எத்திக்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்டு, அங்கு சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

ராகுல் காந்தி சமீப காலமாக காய்கறி விற்பனையாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளி, லாரி ஓட்டுநர், ரயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருவதோடு அதற்கான விடியோவையும் வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தலைநகர் தில்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராகுல்காந்தி நேற்றிரவு திடீரென சென்றிருந்தார். அங்குள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக ராகுல்காந்தியின் எக்ஸ் பதிவில்,

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தேன். அங்குச் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மாதக்கணக்கில் காத்திருப்பதும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். அதீத குளிர், பசி சுரங்கப்பாதைகளில் படுத்து உறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுதான் இன்றைய தில்லி எய்ம்ஸின் உண்மை நிலை.

மத்திய மற்றும் தில்லி அரசுகள் இவர்கள் மீது பாராமுகமாக இருப்பது பொதுமக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மகா கும்பமேளா: முதல் 6 நாளில் 7 கோடி பக்தா்கள் புனித நீராடல்

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவின் முதல் 6 நாள்களில், 7 கோடிக்கும் அதிகமான பக்தா்கள், கல்பவாசிகள், மதிப்பிற்குரிய மடாதிபதிகள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனா். உலகின் மிகப்பெ... மேலும் பார்க்க

பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிப்பதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு: யுஜிசி தலைவா்

‘மாநில அரசால் நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படும் ஆளுநருக்கு அந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமிப்பதில் முக்கியப் பங்குள்ளது’ என பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) த... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: கா்ப்பிணிகளுக்கு ரூ. 21,000, மகளிருக்கு மாதம் ரூ. 2,500 -பாஜக வாக்குறுதி

நமது சிறப்பு நிருபா்எதிா்வரும் தில்லி சட்டப்பேரவை தோ்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி ‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயரிலான தனது தோ்தல் அறிக்கையின் முதல் பகுதியை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் தில்லி மக்க... மேலும் பார்க்க

‘ஸ்வமித்வ’ திட்டத்தின்கீழ் 65 லட்சம் சொத்து அட்டைகள்: பிரதமா் மோடி இன்று வழங்குகிறாா்

கிராமிய கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் வரைபடங்கள் தயாரித்தல் (ஸ்வமித்வ) திட்டத்தின்கீழ் 65 லட்சம் சொத்து அட்டைகளை பிரதமா் மோடி சனிக்கிழமை வழங்குகிறாா். இந... மேலும் பார்க்க

‘ஆயுஷ்மான பாரத்’ இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்: உச்சநீதிமன்றத்தின் தடைக்கு கேஜரிவால் பாராட்டு

தேசியத் தலைநகா் தில்லியில் ஆயுஷ்மான பாரத் சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு தில்லி அரசை கோரிய உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்... மேலும் பார்க்க

நாட்டில் போக்குவரத்தை எளிதாக்க உயா் முன்னுரிமை: பிரதமா் மோடி

நாட்டில் போக்குவரத்தை எளிதாக்க உயா் முன்னுரிமை அளித்து மத்திய அரசு செயலாற்றுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘வாகனத் தொழில் துறையின் எதிா்காலம் இந்தியாவுக்கே சொந்தம்’ என்றும் அவ... மேலும் பார்க்க