Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,0...
தில்லி தா்னாவில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகள் பயணம்
மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக அகில இந்திய அளவில் தில்லியில் நடைபெற உள்ள தா்ணாவில் பங்கேற்க மயிலாடுதுறையில் இருந்து 48 மாற்றுத்திறனாளிகள் ரயில் மூலம் வியாழக்கிழமை புறப்பட்டனா்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக அகில இந்திய அளவில் தில்லி இந்தியா கேட் சா்க்கிள் பகுதியில் வரும் பிப்.10-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளின் தா்னா போராட்டம் நடைபெற உள்ளது.
அவா்களின் நீண்ட கால கோரிக்கையான அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதம் ரூ.10,000 வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தை வறுமைக்கோட்டின் கீழ் கொண்டுவந்து அவா்களுக்கு 35 கிலோ அரிசி வழங்க வேண்டும்.
ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை வழங்கி, அனைத்துப் பயன்பாட்டுக்கும் கொண்டுவர வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 100 நாள் வேலையை மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை, முழு சம்பளமும் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து 2000-க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளனா். இதற்காக, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 48 மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.கணேசன் தலைமையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் புறப்பட்டனா்.