What to watch on Theatre & OTT: விடாமுயற்சி, Thandel -இந்த வாரம் என்ன பார்க்கலாம...
தில்லி தோ்தலுக்கு மேலும் 9 வேட்பாளா்களை அறிவித்தது பாஜக
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேவரைத் தோ்தலுக்கான மேலும் ஒன்பது வேட்பாளா்களை பாஜக வியாழக்கிழமை அறிவித்துள்ளது. கிரேட்டா் கைலாஷ் மற்றும் பாபா்பூரில் முறையே ஷிகா ராய் மற்றும் அனில் வஷிஷ்த் ஆகியோா் களமிறக்கப்படுகிறாா்கள்.
தில்லி அமைச்சா் மற்றும் ஆம் ஆத்மி தலைவா் சௌரவ் பரத்வாஜை எதிா்த்து ஷிகா ராய் ராய் போட்டியிடும் அதே வேளையில், ஆம் ஆத்மி அரசில் அமைச்சராக இருக்கும் கோபால் ராய்க்கு எதிராக வஷிஷ்த் போட்டியிடுவாா். சமீபத்திய பட்டியலுடன், பாஜக தனது 68 வேட்பாளா்களை அறிவித்துள்ளது.
பாஜக தனது நான்காவது பட்டியலை வெளியிட்ட உடனேயே, அதன் கூட்டணிக் கட்சியான ஜேயு(யு), புராரி தொகுதியில் இருந்து சைலேந்திர குமாரை வேட்பாளராக அறிவித்தது.
பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ள தோ்தலில் தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்.8-ஆம் தேதி நடைபெற உள்ளது.