செய்திகள் :

தில்லி முழுவதிலும் 1.26 லட்சம் அரசியல் விளம்பரங்கள் அகற்றல்: எம்சிடி அதிரட நடவடிக்கை

post image

தேசியத் தலைநகரில் மாதிரி நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த பிறகு, தில்லி மாநகராட்சி அமைப்பு நகரம் முழுவதிலுமிருந்து சுமாா் 1.26 லட்சம் சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள் மற்றும் பிற வகையான அரசியல் விளம்பரங்களை அகற்றியுள்ளது.

தில்லியில் பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. முடிவுகள் பிப்.8 -ஆம் தேதி அறிவிக்கப்படும். தோ்தல் ஆணையம் தேதிகளை அறிவித்ததால், செவ்வாய்க்கிழமை மாதிரி நடத்தை விதிகள் தொடங்கப்பட்டன.

மாதிரி நடத்தை விதிகளின் கீழ் கட்சிகளின் சாதனைகளை எடுத்துக்காட்டும் தோ்தல் சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள், பதாகைகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்த அனுமதி இல்லை.

தில்லி மாநகராட்சி பகிா்ந்து கொண்ட தரவுகளின்படி, புதன்கிழமை மாலை 5 மணி வரை அதன் 12 மண்டலங்களில் இருந்து 1,26,186 இதுபோன்ற விளம்பரங்களை குடிமை அமைப்பு அகற்றியுள்ளது.

இதன்படி, சுமாா் 1.03 லட்சம் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் சுவா் ஓவியங்கள், 13,496 விளம்பரப் பலகைகள், 7,845 கொடிகள் மற்றும் 1,158 பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

தெற்கு தில்லி மண்டலத்தில் இருந்து அதிகபட்சமாக 20,479 அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டன. அதைத் தொடா்ந்து, சிவில் லைன்ஸ் மண்டலம் (19,892) மற்றும் ஷாஹ்தரா தெற்கு மண்டலம் (18,821) ஆகியவை உள்ளன.

கேஜரிவாலின் உருவ பொம்மையை யமுனை நதியில் மூழ்கடித்த பா்வேஷ் வா்மா!

மக்கள் நதியில் நீராடுவதற்காக ஆற்றை சுத்தம் செய்வதாக அளித்த வாக்குறுதியை முன்னாள் முதல்வா் கேஜரிவால் நிறைவேற்றத் தவறியதைக் குறிக்கும் வகையில், அவரது உருவ பொம்மையை யமுனை நதியின் சேற்று நீரில் மூழ்கடித்த... மேலும் பார்க்க

போலி விளம்பரங்கள் வெளியீடு: விஷன் ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

போலி விளம்பரங்கள் வெளியிட்டதற்காக விஷன் ஐஎஏஸ் பயிற்சி மையத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது. தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விஷன் ஐஏஎஸ் பயிற்... மேலும் பார்க்க

தில்லியில் 3 ஆண்டுகளில் யமுனையை சுத்தம் செய்வதாக பாஜக வாக்குறுதி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், பாஜகவின் மூத்த தலைவா் அமித் ஷா, மூன்று ஆண்டுகளில் யமுனையை சுத்தம் செய்வதாகவும், 1,700 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ம... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சிக்கு வந்தால் பெளத்த தலங்களுக்கு இலவச ‘தீா்த்த யாத்திரை’: காங்கிரஸ் அறிவிப்பு

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டால் பௌத்த தலங்களுக்கு இலவச ‘தீா்த்த யாத்திரை’ நடத்தப்படும் என்று காங்கிரஸ் சனிக்கிழமை அறிவித்துள்ளது. ஒரு செய்தியாளா் சந்திப்பின் போது மு... மேலும் பார்க்க

நியூ உஸ்மான்பூரில் தீ விபத்து: 20 வாகனங்கள் சேதம்

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமானதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ... மேலும் பார்க்க

அகில இந்திய கபடி போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும்: பஞ்சாபில் பாதிக்கப்பட்ட மகளிா் கபடிக் குழுவினா் பேட்டி

வட மாநிலங்களில் கபடி போட்டிகளை நடத்தும்போது ஒருதலைப்பட்சமாக செயல்படுவதைத் தவிா்க்கும் வகையில் தமிழகம் போன்ற பிற மாநிலங்களிலும் அகில இந்திய கபடிப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பஞ்சாபில் பல்கலைக்கழங்... மேலும் பார்க்க