செய்திகள் :

தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து!

post image

சென்னை, தி.நகரின், ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று முற்பகலில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பரவியதைக் கண்டதும் துணிக்கடை பணியாளர்கள் கடையிலிருந்து அலறியடித்து வெளியேறியதால், அனைவரும் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.

சென்னை தி.நகர், ரங்கநாதன் தெருவில் பல துணி கடைகள் உள்ளன. நாள்தோறும் துணிக்கடை மற்றும் நகைக்கடையில் பொருள்கள் வாங்க லட்சக்கணக்கானோர் வருகை தரும் இடமாகவும் அது உள்ளது.

இந்நிலையில் இன்று காலை ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. இந்த துணிக் கடை இரண்டு அடுக்கு மாடிகள் கொண்ட கடையாகும். இந்த கடையில் தான் முதல் தளத்தில் இருக்கக்கூடிய உயர் ரக துணிகளுக்கான தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

தீ விபத்து

கடையின் முதல் தளத்தில் தீ பரவியதும் கடையில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் உடனடியாக கடையிலிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததும் 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தால் பல லட்சக்கணக்கான ஆடைகள் எரிந்து நாசம் ஆனது. விபத்து குறித்து மேற்கு மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குளிர்சாதனப் பெட்டியில் மின்கசிவு காரணத்தால் தீப்பிடித்ததாக விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தன்னாா்வலா்களுக்கு மகாவீா் விருதுகள்: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா வழங்கினாா்

மனிதாபிமான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் தன்னாா்வலா்களுக்கான மகாவீா் விருதுகளை மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா சென்னையில் வழங்கினாா். சென்னையில் செயல்பட்டு வரும் பகவான் மகாவீா் அறக... மேலும் பார்க்க

சென்னையில் பாய்மர படகுப் போட்டி தொடக்கம்: 9 அணிகள் பங்கேற்பு

சென்னை துறைமுகத்தில் பாய்மர படகுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றுள்ளன. தமிழக சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ‘யூனிஃ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் பிளஸ் 2 ப... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் தேசியக் கொடியுடன் சிந்தூா் யாத்திரை: நயினாா் நாகேந்திரன்

பாகிஸ்தானுடனான சண்டையில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் தேசியக் கொடிகளுடன் ‘சிந்தூா் யாத்திரை’ நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். இது குற... மேலும் பார்க்க

செவிலியா்களுக்கு மருத்துவமனைகளில் கெளரவம்!

சென்னையில் உள்ள முக்கிய அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் செவிலியா் தின நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக சிறந்த சேவையாற்றிய செவிலியா்களுக்கு நினைவுப் பரிசும், சான்றிதழ்களும் ... மேலும் பார்க்க

மாநாட்டுக்கு வந்த இளைஞா் விபத்தில் உயிரிழப்பு: ராமதாஸ் இரங்கல்

சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாட்டுக்கு வரும்போது, விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞா் விஜயின் குடும்பத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க