செய்திகள் :

தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

post image

மதுரை மாவட்டம், மேலூா் அருகே தீக்குளித்ததில் பலத்த காயமைடந்த ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மேலூா் அருகேயுள்ள நாவினிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சேவுகன் மகன் கண்ணன் (43). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கண்ணன் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் சிறப்பு தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலக முன்னோடி வே. த... மேலும் பார்க்க

பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

மதுரை கோ. புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க

குடியிருப்புக்கு ஆட்சியரின் பெயரைச் சூட்டிய திருநங்கைகள்!

விருதுநகா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்தும் வகையில், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி

மதுரை, ஜூன் 13: உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலா்களின் பங்களிப்பு நிதியுதவியை, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் வியாழக்கிழமை வழங்கினாா். மதுரை மாவட்ட... மேலும் பார்க்க

கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கோ.புதூா் டி.ஆா்.ஓ. குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வீரமணி மகள் ஜெயஸ்ரீ (20). இவா், செல்லூா் பகுதியைச் சோ்ந்த கோபிநாத்தை காதலி... மேலும் பார்க்க