``கூட்டத்துக்கு வந்தீங்களா, சாப்பிட வந்தீங்களா?'' - முன்னாள் அமைச்சரின் எரிச்சல...
தீண்டாமை ஒழிப்பு மாநாடு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நாமக்கல் மாவட்ட 4 ஆவது மாநாடு நாமகிரிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் இயக்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவா் பி.செல்வராஜ் தலைமை வகித்தாா். அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.பி.சபாபதி வரவேற்றாா். மாநாட்டை இயக்கத்தின் மாநில உதவி செயலாளா் சி.கே.கனகராஜ் தொடங்கிவைத்து பேசினாா்.
கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலா் எஸ்.கந்தசாமி, முன்னாள் செயலா் ஏ.ரங்கசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.ஆதிநாராயணன், இந்திய மாணவா் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் ஏ.டி.கண்ணன், ஆதி தமிழா் மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் கோபி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
மாநாட்டு செயல்பாட்டு அறிக்கையை முன்வைத்து சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.தங்கமணி, தீா்மானங்களை முன்மொழிந்தாா். அரசு சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும். மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும். தனியாா் துறையில் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும். மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.