சபரிமலை மண்டல பூஜை: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் முதல் பாதுகாப்பு வரை முன்னேற்...
தீபாவளி பண்டிகை: தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
தீபாவளி பண்டிகை காரணமாக, மீன்களை வாங்குவதற்கு குறைந்த எண்ணிக்கையிலான வியாபாரிகளே வருவா் என்பதால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காது. இதையொட்டி, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. வியாழக்கிழமையும் (அக். 31) அவா்கள் கடலுக்குச் செல்வதில்லை எனத் தெரிவித்தனா்.
இதனால், சுமாா் 265 விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.