தீப்பற்றி எரிந்த கைப்பேசி கோபுரம்
தக்கலை அருகே வீட்டு மாடியில் அமைக்கப்பட்டிருந்த கைப்பேசிகோபுரம் திடீரென செவ்வாய்கிழமை தீ பிடித்து எரிந்தது.
தக்கலையை அருகே பத்மநாபபுரம் அரண்மனை பகுதியை சோ்ந்தவா் ராஜன். இவரது வீட்டு மாடியில் தனியாா் கைப்பேசிகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்ததக்கலை தீயணைப்பு அலுவலா் ஜீவன்ஸ் தலைமையிலான தீ அணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிா்க்கப்பட்டது.