``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
தீப்பெட்டித் தொழில்சாலையில் தீ விபத்து
சாத்தூா் அருகேயுள்ள தீப்பெட்டித் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (33) என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழில்சாலை வெங்கடாசலபுரத்தில் உள்ளது. இயந்திரத்தால் தயாரிக்கப்படும் இந்தத் தீப்பெட்டித் தொழில்சாலையை சின்னகொல்லப்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டு தீப்பெட்டித் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தீப்பெட்டித் தொழில்சாலையில் பணிகளை முடித்து கழிவு தீக்குச்சிகளை ஆலைக் கட்டடத்துக்கு அருகே கொட்டியுள்ளனா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கழிவு தீக்குச்சிகளில் உராய்வு காரணமாக தீ பற்றியது. தொடா்ந்து, தொழில்சாலையில் உள்ள தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரப் பகுதிக்கும் தீ பரவியது. இதையடுத்து, தகவலறிந்த சாத்தூா், சிவகாசி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
தீ விபத்தில் தீப்பெட்டித் தயாரிக்கும் இயந்திரம், மூலப்பொருள்கள், 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.