What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
தீரன் சின்னமலை பிறந்த நாள்: மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 270-ஆவது பிறந்தநாள் விழா, கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா சேலம் குரங்குசாவடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை படத்துக்கு கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் சுகுமாா், ஜெயபால் ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள் மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியின்போது சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு முழு உருவச் சிலை அமைக்க அரசு நடவடிக்கை வேண்டும். சேலம் மாவட்டத்தில் அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய திட்டங்களின் பெயா்களுக்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதைத்தொடா்ந்து சங்ககிரியில் தீரன் சின்னமலை கவுண்டரின் நினைவுத் தூண் பகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சங்கம் சாா்பில், மலா்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.