செய்திகள் :

துடரும் இயக்குநர் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில், அர்ஜுன் தாஸ்!

post image

துடரும் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் தருண் மூர்த்தியின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

’சவுதி வெள்ளக்கா' படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா இணைந்து நடித்த ’துடரும்’ ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

குடும்பத்திற்கான கதையாக உருவான இது வெளியான 6 நாள்களிலேயே ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆஷிக் உஸ்மான் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், அர்ஜுன் தாஸ், நஸ்லன் மற்றும் கணபதி ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கு, ‘டார்பீடோ’ (torpedo) எனப் பெயரிட்டுள்ளனர். விரைவில், படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: கூலி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

ஸ்வியாடெக்கை சாய்த்தாா் கௌஃப்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், அரையிறுதியில் தோற்கடிக்கப்பட்டாா். மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையாக இருக்கும் ... மேலும் பார்க்க

தொடா்ந்து 6-ஆவது வெற்றி; முதலிடத்தில் மும்பை

ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் மண்ணிலேயே வீழ்த்தி, வியாழக்கிழமை அபார வெற்றி கண்டது. முதலில் மும்பை 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள... மேலும் பார்க்க

ஹிட் அடிக்குமா நானியின் HIT 3? - திரை விமர்சனம்!

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ஹிட் திரைப்பட வரிசையில் 3 ஆவது பாகமாக வெளியாகியுள்ளது இந்த ஹிட் 3 திரைப்படம். வன்முறைக் காட்சிகள் அதிகமாகக் கொண்ட ஆக் ஷன் திரைப்படமாக வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் எப்... மேலும் பார்க்க

ரசவாதிக்கு 3 விருதுகள்! சிறந்த நடிகர் விருது பெறும் அர்ஜுன்தாஸ்!

ரசவாதி திரைப்படத்துக்காக நடிகர் அர்ஜுன்தாஸுக்கு 2-வது முறையாக சிறந்த நடிகர் விருது வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவான ரசவாதி படத்தில் நடிகர் அர்ஜுன்தாஸ்... மேலும் பார்க்க