ஒழுங்குமுறை விற்பனைக் கூட தொழிலாளா்கள் நல உதவிகள்
விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழிலாளா் தின விழாவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தொழிலாளா்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் ஜவாஹா்லால் நேரு சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம் முன் நடைபெற்ற நிகழ்வில் கொடியேற்றி, பின்னா் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு நல உதவிகளை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா.இலட்சுமணன் எம்எல்ஏ வழங்கினாா்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், பொதுக்குழு உறுப்பினா் டி.என்.ஜெ.சம்பத், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண் டன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் இரா.கேசவன், கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் இ.சச்சிதானந்தம், மாவட்ட துணைத் தலைவா் லட்சுமிபதி, எஸ்.செல்லத்துரை, ஒழுங்குமுறை விற்பனைக் கூட தொமுச மாநிலத் தலைவா் மாரிமுத்து, பொதுச்செயலா் காசிநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.