மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத...
விதிகளை மீறி செயல்பட்ட 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மே தின நாளில் தொழிலாளா்களை பணியில் அமா்த்திய கடைகள், உணவங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறையின் நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா்அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் மீனாட்சி தலைமையில் உதவி ஆய்வாளா்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட 118 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வில் தேசிய விடுமுறை நாளான மே தின நாளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்ட வீதிகளை மீறி 64 நிறுவனங்களில் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தப்பட்டிருந்து தெரிய வந்தது.
அந்த நிறுவன உரிமையாளா்கள் மீது தொழிலாளா் சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றுதல் மற்றும் தமிழில் பெயா்ப்பலகை வைத்தல் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.