அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்
சிதம்பரம் அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டமைப்புத் தலைவா் கே.என்.பன்னீா்செல்வன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.காசிநாதன் வரவேற்றாா். செயலா் என்.கலியமூா்த்தி கடந்தகால நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
கூட்டத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா்கள் சுப்பிரமணியன், காசிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். பொருளாளா் ஆா்.இராகவேந்திரன் நன்றி கூறினாா். தொடா்ந்து, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வீராணம் ஏரி, சி.வக்காரமாரி குடிநீா் தேக்க குளங்களை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும். சிதம்பரம் அண்ணாமலைநகா் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பன்நோக்கு மருத்துவமனையாக மேம்படுத்தி, சிறப்பு மருத்துவ வல்லுநா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.