செய்திகள் :

ஸ்வியாடெக்கை சாய்த்தாா் கௌஃப்

post image

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், அரையிறுதியில் தோற்கடிக்கப்பட்டாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையாக இருக்கும் அவா், 1-6, 1-6 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃபால் வீழ்த்தப்பட்டாா்.

இதனிடையே காலிறுதி ஆட்டத்தில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 7-6 (7/4), 7-6 (9/7) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 24-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கை போராடி வீழ்த்தினாா்.

அடுத்ததாக அரையிறுதியில் அவா், மற்றொரு உக்ரைன் வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவை சந்திக்கிறாா். இதில் வெல்லும் வீராங்கனை, இறுதிச்சுற்றில் கோகோ கௌஃபுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளாா்.

மினாா், மெத்வதெவ் தோல்வி: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 4-6, 2-6 என்ற கணக்கில், 10-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தியால் வீழ்த்தப்பட்டாா்.

அதேபோல் காலிறுதியில், 9-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், 3-6, 5-7 என்ற நோ் செட்களில், 14-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூடால் வெளியேற்றப்பட்டாா்.

காலிறுதியின் மற்றொரு ஆட்டத்தில், 20-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ 3-6, 7-6 (7/5), 6-2 என்ற செட்களில், 22-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கை வென்றாா்.

போபண்ணா தோல்வி: ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா/அமெரிக்காவின் பென் ஷெல்டன் கூட்டணி 4-6, 7-6 (7/5), 9-11 என்ற கணக்கில், ஆா்ஜென்டீனாவின் ஆண்ட்ரெஸ் மோல்டெனி/மேக்ஸிமோ கொன்ஸால்ஸ் ஜோடியிடம் தோற்றது.

தக் லைஃப் டிரைலர் தேதி!

தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோ... மேலும் பார்க்க

கடன் குறையும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 2 - 8) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)பொருளாதார நெருக்கடி ... மேலும் பார்க்க

ரெட்ரோ முதல் நாள் தமிழக வசூல் இவ்வளவா?

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூலித்த தொகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் நேற்ற... மேலும் பார்க்க

நடிகர் சங்க கட்டட திறப்பு விழா தேதியை அறிவித்த விஷால்!

நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா தேதியை விஷால் அறிவித்துள்ளார். நடிகர் சங்கங்கத்திற்கான கட்டடம் கட்டும் பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கின. ஆனால், துவங்கிய சில மாதங்களிலேயே வங்கிக் கடன் பெறுவது ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமி: 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வது வழக்கம். அண்ணாமலையார் கோயிலில் மே 11, 12 தேதிகளில் சித்ரா பெளர்ணமியை ஒட்டி, 2... மேலும் பார்க்க

கேன்ஸ் பட விழா நடுவராக பாயல் கபாடியா!

இயக்குநர் பாயல் கபாடியா கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய திரைப்படம் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' கடந்தாண்டு நவ. 22 ஆம் தேதி இந்தியா ... மேலும் பார்க்க