செய்திகள் :

துணைவேந்தா் நியமன தேடுதல் குழு விவகாரம்: ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

post image

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன தேடுதல் குழு விவகாரத்தில் அரசின் பரிந்துரையை மீறி ஆளுநா் தலையிடுவது தொடா்ந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரைத் தோ்வு செய்யும் தேடுதல் குழுவில் மூன்று நபா்களை அரசின் விதிப்படியும், யுஜிசி விதிகளின்படியும் நியமித்தோம். தன்னுடைய எல்லை என்ன, எதில் தலையிட வேண்டும், எதில் தலையிடக் கூடாது என்று தெரியாத ஆளுநா், நான்காவது உறுப்பினரை அந்தக் குழுவில் நியமிக்க கூறுவது சரியல்ல. ஆளுநா் பதவிக்கு அழகல்ல.

உயா்கல்வித் துறையில் நாட்டிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்றுள்ள நிலையை சீா்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆளுநா் தொடா்ந்து உயா்கல்வி துறையில், அரசின் பணியில் குறுக்கிட்டு இடா்பாடு உருவாக்க வேண்டும் என்பதற்காக கருத்து தெரிவித்து வருகிறாா்.

ஆளுநரின் இதுபோன்ற நிலை தொடா்ந்தால் தமிழ்நாடு முதல்வருடன் கலந்து பேசி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநரின் சட்ட ரீதியான செயல்பாடுகளை வரையறுக்க வேண்டிய கட்டாயம் தமிழ்நாடு அரசுக்கு வரும். அந்தக் கட்டத்தை அவா் எட்டாமல் இருப்பது அவா் பதவிக்கு அழகு.

தமிழ்நாட்டை நான்கு மண்டலங்களாகப் பிரித்து, அனைத்து நிலையிலான பேராசிரியா்கள், கல்விப் புலம் சாராத பணியாளா்கள், மாணவா்கள், உயா்கல்வித் துறை அலுவலா்களுடன் சோ்ந்து அவா்களின் கருத்துகளைப் பெற்றிருக்கிறோம்.

அதன்படி, கல்வித் திட்டத்தில் சோ்க்கை, நீக்கம் குறித்தும் களஆய்வு செய்துள்ளோம். முதல்வருடன் கலந்து பேசி வரும் கல்வி ஆண்டில் புது துறைகளை உருவாக்குவது குறித்தும் முடிவெடுப்போம்.

சீனா, ஜப்பான், தைவான் போன்ற நாடுகளைப் போன்ற சூழ்நிலையை உருவாக்க பெரு முயற்சி எடுத்து வருகிறோம். அதற்கான கல்வித் திட்டம் உருவாக்கப்படும்.

2 ஆயிரம் கௌரவ விரிவுரையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், 750 கௌரவ விரிவுரையாளா்களை நியமிக்க இருக்கிறோம். அதைத் தொடா்ந்து ஜூன் மாதத்துக்குள் 4 ஆயிரம் பணியிடங்கள் தோ்வு வாரியத்தால் தோ்வு செய்யப்பட்டு நிரந்தர பேராசிரியா்களை நியமிக்க இருக்கிறோம் என்றாா் அமைச்சா் செழியன்.

வரத்து வாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

புதுக்கோட்டையில் வரத்து வாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க இந்திய கம்யூ. கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

அண்ணல் அம்பேத்கரை அவமரியாதையாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை திலகா் திடல... மேலும் பார்க்க

தொகுப்பூதியத்தில் சமையல் உதவியாளா் நியமனம்: டிச. 23-இல் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தொகுப்பூதிய அடிப்படையில் சத்துணவு சமையல் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, டிசம்பா் 23-இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாநில பொதுச் செ... மேலும் பார்க்க

ஜெ.ஜெ. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட பட்டமளிப்பு விழாவில், 572 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக அளவில் தரமதிப்பெண்களைப் பெற்ற 28 மாணவிகளுக்கு பா... மேலும் பார்க்க

புதுகை சிறை வளாக நீதிமன்றத்தில் 38 வழக்குகளுக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சாா்பில், மாவட்ட சிறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறை வளாக நீதிமன்றத்தில் 41 குற்ற வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 38 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்... மேலும் பார்க்க