"இந்தியாதான் அமெரிக்காவையே வழிநடத்துகிறது" - ட்ரம்ப் பேச்சு குறித்து அண்ணாமலை
துணை வேந்தர், பெண் சிசுக்கொலைகளை தரவுகளோடு ஆவணப்படுத்தியவர் - கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்
பேராசிரியர், கல்லூரி முதல்வர், துணை வேந்தர், கல்வியாளர் என கல்வித்துறையில் பல்வேறு முகங்களைக் கொண்ட வசந்தி தேவி இன்று காலமானார்.
`நம் சமூகப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கல்வியிலிருந்துதான் பிறக்க முடியும்’ என்ற முழக்கத்தையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தவர், வசந்தி தேவி.
40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கல்வித்தளத்திலும், சமுதாயத்திலும் மாற்றங்களுக்கு வித்திட்டு வந்தவர்.
1980-களின் இறுதியில் உசிலம்பட்டி பெண் சிசுக்கொலைகளை, களத்துக்குச் சென்று தரவுகளோடு ஆவணப்படுத்தினார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியபோது மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பையும் ஒருங்கிணைத்து, பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது முதல் பல பணிகளை முன்னெடுத்தார்.
கற்றல் நலனுக்கான `பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்’தை தொடங்கிதொடர்ந்து களமாடி வந்தார்.
பள்ளி மாணவர்களின் தற்கொலை அவலங்களைத் தடுக்க மிகுந்த அக்கறை காட்டுபவர்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியபோது பெண்கள் பாதுகாப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உலகுக்கு கவனப்படுத்தினார்.

தமிழக அரசு உருவாக்கியிருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு விலும் பங்களித்திருக்கிறார். உரையாடல்கள், கட்டுரைகள், புத்தகங்கள், செயல்பாடுகள் எனச் சமூக முன்னேற்றத்துக்கு பங்களித்து வந்த இவர் தனது 87 வயதில் காலமானார்.
இவருக்கு 2023-ம் ஆண்டிற்கான அவள் விகடனின் 'தமிழன்னை' விருதினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.