செய்திகள் :

துருக்கி கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் ரத்து!

post image

துருக்கியில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக மும்பை ஐஐடி தெரிவித்துள்ளது.

இதில், மும்பை ஐஐடியில் உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்றத் திட்டங்கள், எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் ரத்து செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் ராணுவ மோதலில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி கருத்து கூறியதால், அந்நாட்டுடனான உறவை மத்திய அரசு படிப்படியாகத் துண்டித்து வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் சுற்றுலாத் தலத்திலுள்ள பைசாரான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்பதால், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடித் தாக்குதல் நடத்தியது. இதில் மூன்று பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் பலரும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், துருக்கி, அஜர்பைஜான் போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.

இதனால், துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுடனான தொடர்பை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். சமீபத்தில் அந்நாடுகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுலாப் பயணங்களையும் ஏராளமான இந்தியர்கள் ரத்து செய்தனர்.

இந்நிலையில், துருக்கியில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் உடனான கல்வி சார்ந்த ஒத்துழைப்புகள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப பல்கலைக் கழகம் (ஐஐடி) அறிவித்துள்ளது.

தற்போது, துருக்கியில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்ற நிகழ்ச்சிகளை ஐஐடி மும்பை கொண்டுள்ளது. தற்போது இந்தத் திட்டமும் நிறுத்திவைக்கப்படுவதாகவும், இதில் எந்தவித முன்னேற்றமும் இனி ஏற்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஐடி மும்பையைப் போன்றே, ரூக்ரி (உத்தரகண்ட்) ஐஐடியும் இதேபோன்று துருக்கி உடனான தொடர்புகளைத் துண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி. சிங், பிகாரைச் சோ்ந்த அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தாா். இவா்கள் இருவருமே பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அரச... மேலும் பார்க்க

ஹைதராபாதில் பயங்கரவாத தாக்குதல் சதி! வெடிப் பொருள்களுடன் இருவா் கைது!

ஹைதராபாத் நகரில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருந்த இருவரை தெலங்கானா, ஆந்திர காவல் துறையினா் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனா். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்

‘இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைளுக்கான தலைமை இயக்குநா்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்’ என்று ராணுவ அதிகாரியொருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளி துறைக்கு உதவும்!

வங்கதேசத்தின் சில இறக்குமதி பொருள்களுக்கு இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், நாட்டின் ஜவுளி துறைக்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் குறித்து அவதூறு: ஹரியாணாவில் பேராசிரியா் கைது!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துத் தெரிவித்த ஹரியாணாவைச் சோ்ந்த இணை பேராசிரியா் அலி கான் முகமது காவல் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

தன்கரின் 76-ஆவது பிறந்த நாள்: குடியரசுத் தலைவா், பிரதமா் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரின் 76-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். ராஜஸ... மேலும் பார்க்க