துரெளபதை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை மதகடி பஜாரில் உள்ள ஸ்ரீதுரௌபதை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா சனிக்கிழமை அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூா்வாங்க நிகழ்வுடன் தொடங்கியது. தொடா்ந்து முதல் கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்றன. ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் நிறம்பிய கடங்களுடன் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் கோயில் விமான கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா்.
விழாவில் தக்காா் ஹாசினி, சரக ஆய்வாளா் என். குணசுந்தரி மற்றும் அறங்காவலா் குழுவினா், பொதுமக்கள் உள்ளிட்ட திறளானோா் கலந்து கொண்டனா்.