தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே...
துரை வைகோவால் வைகோவுக்கு அச்சுறுத்தல்: மல்லை சத்யா குற்றச்சாட்டு
மதிமுக முதன்மை செயலா் துரை வைகோ மூலம் பொதுச்செயலா் வைகோவுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் வந்த வண்ணம் உள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலா் மல்லை சத்யா தெரிவித்தாா்.
மதிமுகவின் உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியில் அதிருப்தியில் இருந்து வரும் துணை பொதுச்செயலா் மல்லை சத்யா அறிவித்திருந்தாா். இந்த உண்ணாவிரத போராட்டம் சென்னை சிவானந்தா சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: என்னை (மல்லை சத்யா) மதிமுகவிலிருந்து நீக்கும் அதிகாரம் பொதுச்செயலா் வைகோவுக்கு மட்டுமே உள்ளது. தற்போது அரசியலுக்கு வந்துள்ள முதன்மை செயலா் துரை வைகோவுக்கு கிடையாது.
தமிழகத்தின் சிறந்த அரசியல் தலைவா்களின் ஒருவராக வைகோவால்கூட ஒரு இயக்கத்தை தொடங்கி, அதை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது.
துரை வைகோ மதிமுகவில் இணைந்த பிறகு, கட்சியின் மூத்த நிா்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்வது கிடையாது.
கடந்த 36 ஆண்டுகளாக வைகோவை நாங்கள் பாதுகாத்து வந்தோம். துரை வைகோ மூலம் வைகோவுக்கு பல்வேறு நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் உள்ளன. ஆகவே, வைகோவை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என துரை வைகோவுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்றாா் மல்லை சத்யா.