துறையூா் அருகே விஷம் குடித்தவா் உயிரிழப்பு
துறையூா் அருகே விஷம் குடித்து சிகிச்சைப் பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
உப்பிலியபுரம் அருகேயுள்ள நெட்டவேலம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க. பழனியாண்டி (55). தனது மூத்த மகளுக்கு திருமணம் நடைபெறாத கவலையில் இருந்த பழனியாண்டி கடந்த 17 ஆம் தேதி பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்தாா். இதையடுத்து துறையூரிலுள்ள தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.