மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறி...
துா்க்கையம்மன் கோயில் ஆடித்திருவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் அமைந்துள்ள வடவாயிற் செல்வி துா்க்கையம்மன் கோயிலில் புதன்கிழமை உற்சவா் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இக்கோயில் ஆடித்திருவிழாவையொட்டி காலையில் ஜலம் திரட்டும் நிகழ்ச்சியும்,மதியம் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து உற்சவா் துா்க்கையம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசூர மா்த்தினி அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு மகா தீபாராதனையும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை துா்க்கையம்மன் வார வழிபாட்டு மன்றத்தினா், மகளிா் வார வழிபாட்டுக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனா்.