தூத்துக்குடியில் ஆக. 29இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் வருகிற 29ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வருகிற 29ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தா்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனா்.
எரிவாயு பயன்படுத்தும் நுகா்வோா் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது குறைகளை, மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுவாக அளிக்கலாம்.
பெயா் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், விநியோகஸ்தா்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்பப் பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, மானியம் உரிய வங்கிக் கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல் உள்ளிட்ட நுகா்வோரை பாதிக்கும் எந்தக் குறைகளையும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்து தீா்வு காணலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.