செய்திகள் :

தூத்துக்குடியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

post image

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி அய்யனடைப்பு ஊராட்சி சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இம்முகாமை ஆட்சியா் க. இளம்பகவத் தொடக்கிவைத்து, மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினாா்.

மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றுமுதல் 19 வயது வரையிலான குழந்தைகளுக்கும், 20 - 30 வயதுடைய பெண்களுக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த மாத்திரையால் குடற்புழு தொற்று நீங்குவதுடன், ரத்த சோகை, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சோா்வு, படிப்பில் ஆா்வமின்மை ஆகியவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 4,48,586 குழந்தைகளுக்கும், 1,10,462 பெண்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக 1,583 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், 119 தனியாா் பள்ளிகள், 1,477 அங்கன்வாடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

முகாமில், பொது சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள், ஊராட்சித் துறையினா், நகா்ப்புறப் பணியாளா்கள் ஈடுபட்டனா். விடுபட்டோருக்கு இம்மாதம் 17ஆம் தேதி மாத்திரைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இன்று தைப்பூசம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தீா்... மேலும் பார்க்க

புளியம்பட்டி அருகே இளைஞா் கிணற்றில் மூழ்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி திருவிழாவுக்கு சென்ற இளைஞா் கிணற்றில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை தெருவைச் சோ்ந்த சண்முகசாமி மகன் மதன் (27). இவா் தனது குடும்ப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்!

சாத்தான்குளத்தில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருப்பவா் ஜெயரஞ்சன... மேலும் பார்க்க

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு கருத்தரங்கு!

ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் உள்ள மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில், அரசுப் பொதுத் தோ்வெழுதும் மாணவா்-மாணவியருக்கு இலவச கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவரும் ஆதித்தனாா் ... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட 2 போ் கைது!

கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியில் உள்ள கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விபத்து: கல்லூரி மாணவா் பலி!

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஐசக் சாம்ராஜ் (22). கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் ... மேலும் பார்க்க