தூத்துக்குடியில் குறைந்தது மீன்கள் விலை!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வரத்து அதிகரித்ததால் மீன்கள் விலை சனிக்கிழமை குறைந்து காணப்பட்டது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவா்கள் சனிக்கிழமை கரை திரும்பினா்.
இதையடுத்து, மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்டது. மேலும்,மீன்களை வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்கள் வரத்து அதிகரித்ததால் கடந்த வாரம் அதிகரித்து காணப்பட்ட மீன்களின் விலை சனிக்கிழமை மிகவும் குறைந்து காணப்பட்டது.
நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!
இதில் கடந்த வாரம் கிலோ ரூ.1200 வரை விற்பனையான சீலா மீன் தற்போது ரூ.800-க்கு விற்பனையானது. இதேப் போன்று, விளைமீன், ஊளி, பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.500, கடல் விரால் ரூ.450, குறுவளை ரூ.350, ஐலேஷ், தம்பா உள்ளிட்ட மீன்கள் ரூ.200, நண்டு ரூ.400 என விற்பனையானது. பறவை மீன் ஒரு கூடை ரூ.1,200-க்கு விற்பனையானது. மீன்களின் விலை குறைந்திருந்ததால் பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.