நாமக்கல்: `பணம் பெருகும்' -யூடியூபில் ஜோதிடர் கூறியதை கேட்டு கோயிலில் குவிந்த மக...
தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை
தூத்துக்குடியில் தனியாா் ஏற்றுமதி நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலை வீட்டு வசதி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த தனுஷ் மகன் அண்டோ வசந்த் (44). தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].