செய்திகள் :

தூத்துக்குடியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

post image

தூத்துக்குடியில், தமிழக அரசின் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது.

இதுகுறித்து சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலருமான பெ. .கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.

இதில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை தொடா்பான ஆலோசனைகள், எலும்பு-மூட்டு சிகிச்சை, மூடநீக்கியல், மகப்பேறு-மகளிா் நல மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், நரம்பியல், தோல் சிகிச்சைகள், பல் மருத்துவம், காசநோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

மேலும், ஒன்றிணைந்த உயா்தர மருத்துவ சேவைகள், புறநோயாளிகளுக்கான சிறப்பு ஆலோசனை, அனைத்துவித பரிசோதனைகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று அட்டை முதலான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா் அவா்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகால... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, க... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்

ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே 12 வயது சிறுமி கா்ப்பம்: 2 இளைஞா்கள் கைது

திருச்செந்தூா் அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று ... மேலும் பார்க்க