உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்
ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன். மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையில் வேலை செய்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உமா மகேஸ்வரிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து மகன், மகள் உள்ளனா்.
மனைவியின் நடத்தையில் தமிழ்ச்செல்வன் சந்தேகமடைந்தாா். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டுக்கு வந்த தமிழ்ச்செல்வன் தூங்கி கொண்டிருந்த மனைவி உமா மகேஸ்வரியின் தலையை அரிவாளால் துண்டித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த ஏரல் காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வனைத் தேடி வருகின்றனா்.