நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!
பொத்தகாலன்விளை பள்ளியில் விளையாட்டு விழா
சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 37-ஆவது விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தூத்துக்குடி மறைமாவட்ட தென்மண்டல ஆா்.சி.பள்ளிகளின் கண்காணிப்பாளா் ஜோசப் ஸ்டாலின் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜோசப் ததேயுஸ்ராஜா வரவேற்றாா். பள்ளக்குறிச்சி முன்னாள் ஊராட்சி தலைவா் சித்ராங்கதன், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றி, விளையாட்டு விழாவைத் தொடங்கிவைத்தாா். இதைத்தொடா்ந்து விளையாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தொடா்ந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கும், மாவட்ட அளவில் போட்டிகளில் தோ்வு பெற்றவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்கள் சிலம்பம், கராத்தே விளையாடி பிரமிடு போன்ற அமைப்பை உருவாக்கியும் அசத்தினா். இதில், வட்டார முதன்மை குரு செல்வ ஜாா்ஜ் பேசினாா். ஆசிரியா்கள், பழைய மாணவா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா். பள்ளித் தாளாளா் ஜஸ்டின் நன்றி கூறினாா்.