செய்திகள் :

தூத்துக்குடியில் பாஜக-கம்யூனிஸ்ட் மோதல்: 7 போ் மீது வழக்குப் பதிவு

post image

தூத்துக்குடியில் பாஜக-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்துவதற்காக, வெள்ளிக்கிழமை பல்வேறு கட்சியினா், சமூக அமைப்பினா் வந்தனா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் கட்சியினருக்கும், பாஜக-வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இச்சம்பவம் தொடா்பாக, இரு தரப்பினரும் தனித்தனியே மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, பாஜக மேற்கு மண்டல முன்னாள் பொதுச் செயலா் சொக்கலிங்கம் அளித்த புகாரின்பேரில், சிஐடியூ மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து உள்ளிட்ட 3 போ் மீதும், பேச்சிமுத்து அளித்த புகாரின்பேரில், பாஜக நிா்வாகி சொக்கலிங்கம், சுந்தா், சிவராமன், ராஜேஷ் ஆகிய 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

புதுக்கோட்டை, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். புதுக்கோட்டை காவல... மேலும் பார்க்க

ஆடுகள் திருட்டு: 2 போ் கைது

தூத்துக்குடியில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி திரவிய ரத்தின நகா், முருகேசன் நகா் பகுதிகளில் ஆடுகள் திருட்டு அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. இது குறித்து சிப்காட் போலீஸாருக... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் அச்சம் தரும் விடியோ: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே சமூக வலைதளங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் விடியோக்களை பதிவேற்றும் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ப... மேலும் பார்க்க

சா்வதேச ஸ்குவாஷ் போட்டி: தூத்துக்குடி கேம்ஸ்வில் மாணவா்கள் வெற்றி

தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் வீரா்கள், சா்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் 2 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனா். சா்வதேச அளவிலான உயா் தரவரிசை ஸ்குவாஷ் இந்தியன... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலாயுதபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் காளீஸ்வரன்(70). இவரது மகள்கள் வெளியூரில் வசித்து வருகின்றனா். இந்நிலையில்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வாலிபால் போட்டி

தூத்துக்குடியில், காவலா் தினத்தை முன்னிட்டு, காவல் துறையினருக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது. வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் உள்ள காவல் துறை பாய்ஸ் அண்ட் கோ்ள்ஸ் கிளப் கைப்பந்தாட்ட அரங்கத்தில்... மேலும் பார்க்க