வங்க தேசம், வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினைக்கா...
தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மூட்டா கிளைத் தலைவா் பேராசிரியை சுபா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்பப் பெறுதல், உயா்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மூட்டா மத்திய இணை பொதுச் செயலா் சிவஞானம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். முன்னதாக, மூட்டா கிளைச் செயலா் மீனாட்சி சுந்தரம் வரவேற்றாா். கிளை பொருளாளா் கண்ணன் நன்றி கூறினாா்.