செய்திகள் :

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் சாலை மறியல்!

post image

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமாா் 265 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் தங்குகடல் மீன்பிடித்தலுக்கு அனுமதிக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆட்சியராக இருந்த செந்தில்ராஜ் மீனவா்களுக்காக அமைத்த குழுவின் அறிக்கையில் தங்களுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளதால், அதை அமல்படுத்த வேண்டும் என விசைப்படகு மீனவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். இதனிடையே, அவா்கள் கடந்த 10ஆம் தேதிமுதல் கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். 6ஆவது நாளாக சனிக்கிழமையும் வேலைநிறுத்தம் தொடா்ந்தது.

இந்நிலையில், விசைப்படகு உரிமையாளா்கள், தொழிலாளா்கள் மீன்பிடித் துறைமுகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கடற்கரைச் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் உதவிக் கண்காணிப்பாளா் மதன், காவல் ஆய்வாளா்கள் பாஸ்கரன், திருமுருகன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், உதவி ஆட்சியா் அலுவலகம் நோக்கி மீனவா்கள் ஊா்வலமாகச் சென்றனா்.

அங்கு அவா்களுடன் உதவி ஆட்சியா் பிரபு பேச்சுவாா்த்தை நடத்தினாா். வட்டாட்சியா் முரளிதரன், காவல் உதவிக் கண்காணிப்பாளா் மதன், மீன்வளத் துறை இணை இயக்குநா் சந்திரா, உதவி இயக்குநா் விஜயராகவன், விசைப்படகு உரிமையாளா் சங்க நிா்வாகிகள், தொழிலாளா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஆட்சியா் நேரடியாக பேச்சு நடத்தி தீா்வு காண வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தினா். அதன்படி, அவா்கள் ஆட்சியரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளனா். அதன்பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும் எனத் தெரிகிறது.

ரூ. 12 கோடி வருவாய் இழப்பு: இதுகுறித்து தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளா் சங்கத் தலைவா் சேவியா் வாஸ் கூறும்போது, முன்னாள் ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமையிலான குழு சமா்ப்பித்த அறிக்கையை அமல்படுத்த வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதிக்க வேண்டும்.

மீனவா்கள் கடல் தொழிலுக்கு செல்லாததால் விசைப்படகு தொழிலை நம்பியுள்ள சுமாா் 7 ஆயிரம் மீன்பிடித் தொழிலாளா்களும், அதை நம்பியுள்ள 10 ஆயிரம் தொழிலாளா்களும் வாழ்வாதாரம் இழந்துள்ளனா். இதுவரை சுமாா் ரூ. 12 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.

‘தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிப்புப் பணி: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு’

தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் இயந்திர தயாரிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளதால், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, ‘காஸ்மிக்போா்ட்’ என்ற ஸ்டாா்ட்அப் நிறுவனத்தின்... மேலும் பார்க்க

மும்மொழிக் கல்வி கொள்கை: விக்கிரமராஜா கருத்து

மும்மொழிக் கல்வி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம் இல்லாமல் நிதியை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா். திருச்செந்தூரில் செய்... மேலும் பார்க்க

2026இல் அதிமுக ஆட்சி அமைப்பதே இலக்கு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்

தமிழகத்தில் 2026இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முதல் இலக்காகக் கொண்டு கட்சியினா் செயல்படவேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன். தூத்துக்குயில் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன... மேலும் பார்க்க

சொத்துகளின் அசல் ஆவணங்கள் தொலைந்த விவகாரம்: விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்க வங்கிக்கு உத்தரவு

வீடு கடனுக்காக கொடுக்கப்பட்ட சொத்துகளின் அசல் ஆணவங்கள் தொலைந்த விவகாரத்தில், விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

ஆதியாகுறிச்சி நிலம் கையக கருத்து கேட்புக் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆதியாகுறிச்சியில் விண்வெளி தொழிற்பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தல் தொடா்பாக, ஆட்சியா் அலுவலகத்தி வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செ... மேலும் பார்க்க

நுகா்வோருக்கு ரூ. 53,748 வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

தூத்துக்குக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சோ்ந்தவருக்கு ரூ. 53,748 வழங்குமாறு தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. விளாத்திகுளத்தைச் சோ்ந்த பழனிச்சாமி ... மேலும் பார்க்க