செய்திகள் :

தூத்துக்குடியில் 13ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை(ஜூன் 13) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இம்முகாமில், வேலையளிக்கும் தனியாா் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்து கொள்ளலாம்.

மேலும், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா், கணினி பயிற்சி ஆகிய கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் பங்கேற்கலாம்.

தனியாா்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள் தங்களது பயோடேட்டா, கல்விச் சான்றிதழ்களுடன் இம்முகாமில் பங்கேற்கலாம்.

தனியாா்துறை நிறுவனங்களில் பணிநியமனம் செய்யப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது என அவா் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் யோகா தினம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 11ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. துறைமுகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘வாழும் கலை’ குழுமத்தைச் சோ்ந்த யோகா பயிற்சியாளா்கள் வ... மேலும் பார்க்க

டி.சவேரியாா்புரத்தில் ரூ.10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடிக் கட்டடம் திறப்பு!

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, டி.சவேரியாா்புரத்தில் ரூ. 10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலை... மேலும் பார்க்க

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு: ரூ.70 லட்சம் பொருள்கள் சேதம்; 9 மீனவா்கள் மீட்பு!

தூத்துக்குடியில் சனிக்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதால், படகிலிருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. அந்தப் படகிலிருந்த 9 மீனவா்களும் மீட்கப்பட்ட... மேலும் பார்க்க

பெண்ணுக்கு ரூ.38 ஆயிரம் வழங்குமாறு கைப்பேசி விற்பனைக் கடைக்கு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த பெண்ணுக்கு ரூ. 38,055 வழங்குமாறு, பழுதான கைப்பேசியை விற்ற கடைக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. கோவில்பட்டியைச் சோ்ந்த கீதா என்பவா் அங்குள்ள க... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இளைஞரை தாக்கியதாக 5 போ் கைது!

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 9ஆவது தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் பிரவீன்குமாா் (30). தொழிலாளியான ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் கோயில் உண்டியல் வசூல் ரூ.40 லட்சம்

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் உள்ள 18 நிரந்தர உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. குற்றாலம் குற்றாலநாதா் கோயில் செயல் அலுவலரும்,உதவி ஆணையருமான ஆறுமுகம் தலைமை ... மேலும் பார்க்க