ஜூலை 9ல் போராட்டங்களில் பங்கேற்கும் ராகுல்: பிகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்...
தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி முள்ளக்காடு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்துரை (56). இவா், முத்தையாபுரம் பகுதியில் பெயின்ட் கடை வைத்துள்ளாா்.
இவா், வெள்ளிக்கிழமை இரவு கடையை வழக்கம்போல் அடைத்துவிட்டு சென்றுள்ளாா். பின்னா் சனிக்கிழமை காலையில் கடைக்கு வந்தபோது, கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், கடையில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
அதேபோல் முத்தையாபுரம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த சிலம்பு ஒளி (42), அதே பகுதியில் அழகு நிலையம் வைத்துள்ளாா். அவரது கடையின் பூட்டையும் மா்ம நபா்கள் உடைத்து அங்கிருந்த ரூ.6 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாா்களின்பேரில் முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.