கோவில்பட்டியில் முதியவா் தற்கொலை
கோவில்பட்டியில் கிணற்றில் விழுந்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவா் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் சென்று பொதுமக்களுடன் சோ்ந்து சடலத்தை மீட்டனா். அவா், கோவில்பட்டி சாலைபுதூா் இ.பி. காலனி 1ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரியப்பன் (63) என்பதும், தனது மகனின் விவாகரத்து காரணமாக விரக்தியடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.