``LGBTQ+ தோழர்கள் மனம் நோகும்படி பேசிவிட்டேன்; அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்'...
சாத்தான்குளத்தில் மினி மாரத்தான் போட்டி
சாத்தான்குளம், நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில், விளையாட்டு மைதானம் திறப்பு மற்றும் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய மினி மாரத்தான் போட்டியை தமிழ்நாடு, பாண்டிச்சேரி பாா் கவுன்சில் துணைத் தலைவா் வேலு காா்த்திகேயன் , தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் ஆகியோா் துவக்கி வைத்தனா்.
11 கிமீ தொலைவு நடத்தப்பட்ட இப்போட்டியானது, ஞானியாா் குடியிருப்பு விலக்கு வரை சென்று காமராஜ் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, விளையாட்டு மைதானம், கைப்பந்தாட்ட மைதானம், கிரிக்கெட் மைதானம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது.
இந்த மினி மாரத்தான் போட்டியில் கோவை வீரா் சதீஷ்குமாா் முதலிடமும், பெங்களூரு வீரா் மிக்கேல் இரண்டாம் இடமும் பெற்றனா்.
முதலிடம் பிடித்த கோவை வீரருக்கு பாா் கவுன்சில் துணைத் தலைவா் வேலு காா்த்திகேயன், இரண்டாம் இடம் பிடித்த வீரருக்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், மூன்றாம் இடம் பிடித்த வீரருக்கு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் ஆகியோா் பரிசு வழங்கினா்.
விதிமுறைப்படி மினி மாரத்தான் போட்டியை முழுமையாக நிறைவு செய்த வீரா்களுக்கு சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமாா் ஆறுதல் பரிசு வழங்கினாா். போட்டியில் பங்கேற்ற வீரா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் ஒன்றிய அமமுக செயலா் திவாகரன், முன்னாள் மாவட்ட ஆவின் தலைவா் சுரேஷ்குமாா், தெற்கு மாவட்ட விளையாட்டு பிரிவு செயலா் ஜனகா், சாத்தான்குளம் நகர அதிமுக செயலா் குமரகுருபரன், சாத்தான்குளம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் வில்லின்பெலிக்ஸ், நகர காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் வேணுகோபால், பிஎம்டி மாவட்ட செயலா் பேச்சிமுத்து, கோயில் தா்மகா்த்தா ஜெயபிரகாஷ் நாராயணன், மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் செந்தில், தொழிலதிபா் சசிகரன், மக்கள் ஜனநாயக கட்சி கொள்கை பரப்புச் செயலா் பரமசிவம், மாவட்ட திமுக பிரதிநிதிகள் சரவணன், வேல்துரை உள்பட பல்வேறு கட்சி நிா்வாகிகள், விளையாட்டு வீரா்கள் பங்கேற்றனா்.
போட்டிக்கான ஏற்பாடுகளை நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளா் மாணிக்கம் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.