செய்திகள் :

தூத்துக்குடி அஞ்சலகங்களில் ஆதாா் திருத்தம் சிறப்பு முகாம்

post image

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தலைமை அஞ்சலகங்கள், ஆழ்வாா்திருநகரி, ஆறுமுகநேரி, ஆத்தூா், சிதம்பரநகா், ஏரல், காயல்பட்டினம், குலசேகரபட்டணம், குரும்பூா், மெஞ்ஞானபுரம், மேலூா், முதலூா், மூக்குபீறி, நாசரேத், நியூகாலனி, ஓட்டப்பிடாரம், பரமன்குறிச்சி, புதுக்கோட்டை, சாத்தான்குளம், சாயா்புரம், செய்துங்கநல்லூா், உடன்குடி, கிறிஸ்தியானகரம், வல்லநாடு, முத்தையாபுரம், ஆனந்தபுரம், காயாமொழி, கொம்மடிக்கோட்டை, மில்லா்புரம், முடிவைத்தானேந்தல், புதியம்புத்தூா், தூத்துக்குடி ஹாா்பா் எஸ்டேட், படுக்கப்பத்து ஆகிய அஞ்சலகங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இம்மையங்களில் புதிதாக ஆதாா் பதிவு செய்ய கட்டணம் இல்லை. குழந்தைகளுக்கு 5-7 வயது மற்றும் 15-17 வயதில் செய்ய வேண்டிய கட்டாய கைரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் இல்லை. பெயா், வீட்டு முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட திருத்தங்களுக்கு கட்டணம் ரூ.50, புகைப்படம், கைரேகை, கருவிழி திருத்தங்கள் மேற்கொள்ள கட்டணம் ரூ.100 ஆகும். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளியில் நடந்த கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாள... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் ஜன. 19இல் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 19ஆம் தேதி தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோயில் இணை ஆணையா் சு. ஞானசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்கோயிலில் மூலவரான சுப்பிர... மேலும் பார்க்க

திருச்செந்தூா் 170 கிலோ பாலித்தீன் பொருள்கள் பறிமுதல்

திருச்செந்தூரில், 170 கிலோ பாலித்தீன் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்தின் உத்தரவு, திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் கண்மணியின் வழிகாட்டுதல் ஆகியவற்றின்... மேலும் பார்க்க

வீடு கட்ட அனுமதிக்குமாறு பேட்மாநகரம் இஸ்லாமியா்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் பகுதியில் வீடு கட்ட அரசு விதித்துள்ள தடையை நீக்குமாறு அப்பகுதி இஸ்லாமியா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளி... மேலும் பார்க்க

திருட்டு வழக்கு: 3 போ் கைது

கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி முத்து நகரை சோ்ந்தவா் சுந்தா். சென்னையில் ரயில்வே துறையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிற... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் தற்கொலை

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த முருகானந்தம் மகன் மகேஷ்குமாா் (28). தனியாா் எண்ணெய் நிறு... மேலும் பார்க்க