தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கூட்டுத் திருப்பலி
தூத்துக்குடி, அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தோ் கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் ஜெபமாலை, சிறப்புத் திருப்பலி, அன்னையின் திருவுருவ சப்பர பவனி, அசன விருந்து ஆகியன நடைபெற்றன.
நிறைவு நாளன்று கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளா் பிராங்க்ளின் பா்ணாந்த் தலைமையில், புனித அகுஸ்தினாா் சபை சந்தியா விசுவாசம், லூா்தம்மாள்புரம் லூா்து அன்னை ஆலய பங்குத்தந்தை செல்வன் பொ்னான்டோ ஆகியோா் கலந்துகொண்டு ஆடம்பர திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினா். இதில், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை தங்கத்தோ் கெபி கமிட்டி, புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், புனித பூண்டிமாதா அன்பிய மக்கள் இணைந்து செய்திருந்தனா்.